Monday, July 14, 2008

அறிவியலின் அடிப்படை தெரியாமல் புருடா விடும் SP.VR. SUBBIAH !!!

SP.VR. SUBBIAH அவர்கள் தனது பின்வரும் பதிவில்,

http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_14.html

//இப்பொது சொல்லுங்கள் உங்கள்:

ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை
ஆண்டுகள் ஆகும்?

யோசித்து விட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V

குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.

அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும்
அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும்
பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்

இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான். இன்னும் லக்கினமும்
வேண்டுமென்றால், மறுபடியும் to be multiplied by 12

விடை ஒரு யுகம் ஆகும். ஒரு யுகத்திற்கு ஒரு உங்களுடையதைப் போன்ற
ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.

நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!

தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
///

என்று கூறியுள்ளார்.

அவர் சொல்லும்படி
குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள் எடுத்துக்கொண்டால்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 180 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

இவரை போன்ற ஆட்கள் அறிவியலின் அடிப்படை தெரியாமல், கேள்வி கேட்க யாரும் இல்லை என்று எண்ணி கன்டதையும் அறிவியல் உண்மையாக சித்தரிக்க/ திரிக்க முயல்வது சமுதாயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்!!!

Sunday, July 13, 2008

தமிழ் மனம் மாற வேண்டும் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்!!!

சமீப காலமாக இணையத்தில் காமம், யோனி முதலான சொற்கள் மட்டுருத்தப் பட வேண்டும் என சில கலாச்சாரக்காவலர்களால் முன்னின்று நிலைநிருத்தும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சென்னை தமிழ் பதிவர் ஒருவர் இதைப்பற்றி கூருகையில் இதை முன்னின்று நடத்துபவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள், அவர்கள் இருக்கும் இடங்களில் இதுவெல்லாம் பெரிய விடயமில்லையே? என்று.

அவர் எதிர்பார்ப்பு இயற்கையே!! ஆனால் அமெரிக்க வாழ் தமிழர்கள் மனம் அவ்வளவு மாற வில்லை என்பதுவே உண்மை!

என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் படி பெரும்பான்மையான அமெரிக்க வாழ் தமிழர்கள் இங்கே வாழ்ந்தாலும் அமெரிக்காவில் உள்ள பெண்கள் எல்லாம் பணம் கொடுத்தால் படுக்கைக்கே வருவார்கள் என்று தவறாக நினைப்பது மட்டுமின்றி அப்படி அவர்கள் எண்ணுவது போலவே நடக்கிறார்கள்.

இப்படிபட்ட எண்ணம் இங்கே 40 வருடங்களாக வாழும் தமிழர், இந்திய அறிவியல் கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளவர், கணிப்பொறி ஆய்வாளர், அமெரிக்க பச்சை அட்டை ( கிரின் கார்ட்) பெற அமெரிக்கப் பெண்ணை மணந்த தமிழர் என பல தரப்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இப்படிப் பட்ட உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் மேலோங்கி கிடப்பதை காண்கிறேன்.

இதற்கு மாற்றாக உண்மையையும், யதார்த்தத்தையும் புரிந்த சிலரில் இங்கையே பிறந்து வளர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் இங்கே படிப்பு மற்றும் வேலைக்காக வந்த ஒரு சில பெண்களைப் பார்க்கிறேன்.

பெரும்பான்மையான அமெரிக்க வாழ் தமிழர்கள், தங்கள் வட்டாரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதுவே முற்போக்காக எண்ணுகிறார்கள்.

இப்படிப்பட்ட எண்ணங்களுடைய தமிழர்கள் மனம் மாற வேண்டும் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்!!!