தமிழ் மனம் மாற வேண்டும் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்!!!
சமீப காலமாக இணையத்தில் காமம், யோனி முதலான சொற்கள் மட்டுருத்தப் பட வேண்டும் என சில கலாச்சாரக்காவலர்களால் முன்னின்று நிலைநிருத்தும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சென்னை தமிழ் பதிவர் ஒருவர் இதைப்பற்றி கூருகையில் இதை முன்னின்று நடத்துபவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள், அவர்கள் இருக்கும் இடங்களில் இதுவெல்லாம் பெரிய விடயமில்லையே? என்று.
அவர் எதிர்பார்ப்பு இயற்கையே!! ஆனால் அமெரிக்க வாழ் தமிழர்கள் மனம் அவ்வளவு மாற வில்லை என்பதுவே உண்மை!
என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் படி பெரும்பான்மையான அமெரிக்க வாழ் தமிழர்கள் இங்கே வாழ்ந்தாலும் அமெரிக்காவில் உள்ள பெண்கள் எல்லாம் பணம் கொடுத்தால் படுக்கைக்கே வருவார்கள் என்று தவறாக நினைப்பது மட்டுமின்றி அப்படி அவர்கள் எண்ணுவது போலவே நடக்கிறார்கள்.
இப்படிபட்ட எண்ணம் இங்கே 40 வருடங்களாக வாழும் தமிழர், இந்திய அறிவியல் கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளவர், கணிப்பொறி ஆய்வாளர், அமெரிக்க பச்சை அட்டை ( கிரின் கார்ட்) பெற அமெரிக்கப் பெண்ணை மணந்த தமிழர் என பல தரப்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இப்படிப் பட்ட உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் மேலோங்கி கிடப்பதை காண்கிறேன்.
இதற்கு மாற்றாக உண்மையையும், யதார்த்தத்தையும் புரிந்த சிலரில் இங்கையே பிறந்து வளர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் இங்கே படிப்பு மற்றும் வேலைக்காக வந்த ஒரு சில பெண்களைப் பார்க்கிறேன்.
பெரும்பான்மையான அமெரிக்க வாழ் தமிழர்கள், தங்கள் வட்டாரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதுவே முற்போக்காக எண்ணுகிறார்கள்.
இப்படிப்பட்ட எண்ணங்களுடைய தமிழர்கள் மனம் மாற வேண்டும் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்!!!
1 comment:
சிறப்பான பதிவு...இந்த சிந்தனை தான் கிட்ட தட்ட எல்லோரிடமும் இருக்கிறது .
//இப்படிப்பட்ட எண்ணங்களுடைய தமிழர்கள் மனம் மாற வேண்டும் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்!!//
இவனுங்க என்னைக்கு மாற ?? நாளுக்கு நாள் வருசத்துக்கு வருஷம் நிலைமை மோசமைட்டே போகுது ... !!! நாப்பது வருசத்துக்கு முன்னாடி எம் ஆர் ராதா பேசின வசனத்த இன்னிக்கு பேச முடியாது...
Post a Comment