Saturday, January 31, 2009

தமிழகத் தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டியது!!!


ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது!! .

யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார். ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை யூதர்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக் கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.


என்ற கூற்றுப் படி பின் வரும் படி ஆகிவிடக் கூடாது!!!

முதலில் அவர்கள் இலங்கைத் தமிழர்களை அழிக்க முயன்றனர்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் இலங்கைத் தமிழர் அல்ல.
பின்னர் அவர்கள் வடமாநிலத் தமிழரை அழிக்க முயன்றனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான்
வடமாநிலத் தமிழர் அல்ல.
பின்னர் அவர்கள் தென்கோடித் தமிழர்களை அழிக்கத் துணிந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான்
தென்கோடித் தமிழரும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னை அழிக்க முயன்றனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.


எனவே தமிழர்களே ஒன்று படுவோம்!!!

No comments: