Monday, July 14, 2008

அறிவியலின் அடிப்படை தெரியாமல் புருடா விடும் SP.VR. SUBBIAH !!!

SP.VR. SUBBIAH அவர்கள் தனது பின்வரும் பதிவில்,

http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_14.html

//இப்பொது சொல்லுங்கள் உங்கள்:

ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை
ஆண்டுகள் ஆகும்?

யோசித்து விட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V

குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.

அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும்
அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும்
பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்

இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான். இன்னும் லக்கினமும்
வேண்டுமென்றால், மறுபடியும் to be multiplied by 12

விடை ஒரு யுகம் ஆகும். ஒரு யுகத்திற்கு ஒரு உங்களுடையதைப் போன்ற
ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.

நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!

தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
///

என்று கூறியுள்ளார்.

அவர் சொல்லும்படி
குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள் எடுத்துக்கொண்டால்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 180 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

இவரை போன்ற ஆட்கள் அறிவியலின் அடிப்படை தெரியாமல், கேள்வி கேட்க யாரும் இல்லை என்று எண்ணி கன்டதையும் அறிவியல் உண்மையாக சித்தரிக்க/ திரிக்க முயல்வது சமுதாயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்!!!

3 comments:

Anonymous said...

எனக்கு புரியவில்லை
எனக்கு இதை விளக்கமாக கூற முடியுமா?

களப்பிரர் - jp said...

சின்ன வயசுல கணக்கு வாத்தியார் மி. பெ. ம. / மி சி ம னு சொல்லி தரலையா ??

கூகுல்ல தேடினதுல
http://www.math.com/school/subject1/lessons/S1U3L3DP.html

களப்பிரர் - jp said...

‘அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளை கண்டித்திருக்கிறார். இதே மாதிரி தான் ஜோதிடத்தில் விண்வெளி அறிவியலை படிப்பதும்...