ஆன்மீகத் தொண்டனின் நிலை!!!- ஒரு பகுப்பாய்வு.
வர்ணம்-குறும்படம்
நன்றி- பெரியார் வலைக்காட்சி.
நான் என்னைப்பற்றி கூறுவதை விட மற்றவர் கூறுவதே சிறந்தது.
Posted by தேரியூரான் at 4:57 PM 0 comments
பார்ப்பனர்கள் என்ன உழைத்தா முன்னேறினார்கள்!!!
அவர்களை ஏன் மென்பொருள் வல்லுனர்களுடன் தொடர்புபடுத்துகிறார்? - தமிழா.. தமிழா... எழுத்தாளர்.
இதுதான் சந்துல சிந்து பாடுரதா!!!
இங்கே அவர் கூறியது..
http://tvrk.blogspot.com/2008/11/blog-post_4264.html
Posted by தேரியூரான் at 6:56 PM 0 comments
அவன் தான் தமிழின எதிரி !!!
பாம்பையும் அவனையும் பார்த்தால் முதலில் அழிக்கப்பட வேண்டியவன் அவனே!!!
Posted by தேரியூரான் at 7:57 PM 0 comments
ஒபாமாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது!!!
பொருமை + திட்டமிடல்+ நம்பிக்கை + செயல்
மார்டின் லூதர் கிங் + கருப்பினர் + லதின் அமெரிக்கர் + நம்பிக்கை = ஒபாமா
பெரியார் + திராவிடர் + ஈழம்+ நம்பிக்கை = விடுதலை
Posted by தேரியூரான் at 8:26 AM 0 comments
எதிர் கட்சி எதிரி கட்சியல்ல!!!
இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழர்கள் ஒன்று பட வேண்டும்!!!, சஞ்சலங்களைக் களைந்து.
Posted by தேரியூரான் at 6:26 AM 0 comments
கந்த சட்டிக்கும், இராமன் பானை (யாணம்)- த்துக்கும் உள்ள தொடர்பு!!!
1. கந்தபுராணமும் - இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும்.
2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட்டவையேயாகும்.
3. இரண்டு கதைகளும் ஆரிய சமயக் கொள்கைகளை வலியுறுத்துவதைக் கருத்தாய்க் கொண்டு ஆரியக் கடவுள் களைப் பெருமைப்படுத்த ஏற்படுத்தியவையாகும்.
4. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்து கற்பிக்கப்பட்டவையாகும்.]
5. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும், அசுரர்கள் இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த் தியும், இழித்தும் காட்டப்பட்டவைகளாகும் என்பதோடு, இரண்டு கதைகளுக்கும் இந்திரன் பிரதானப்பட்டவனாகிறான்.
6. இரண்டு கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்புக் காவியங்களும் இரண்டு கோவில் அர்ச்சகர்களால், அதாவது கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளால் பாடப்பட்டவை யாகும். கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரி என்னும் அர்ச்சகராலும், இராமாயணம் கம்பன் என்னும் பூசாரியாலும் தமிழில் பாடப்பட்டவை.
7. இரண்டு கதை உற்பத்திக்கும் காட்டப்பட்டக் காரணங்கள் - அசுரர்களின் தொல்லைகள் பொறுக்க மாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்களின் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக் கொண்டவைகளாகும்.
8. இராமாயணக் கதைக்கு விஷ்ணு இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்தபுராணத்திற்கு சிவன் கந்தனாகப் (சுப்ரமணியனாக) பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.
9. இரண்டு கதாநாயகர்களுடைய பிறப்பும் அருவெருக்கும் தன்மையாகவே, அதாவது இராமன் தனது தாய் கவுசலை, யாகத்தின்போது குதிரையுடன் ஓர் இரவெல்லாம் கட்டித் தழுவிப் படுத்திருந்து, பகலெல்லாம் யாகப்ரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி இராமன் பிறந்ததாகவும்,
கந்தன், தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல தேவ ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து, தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில் வீரியத்தை விட்டு, அது கங் கையில் சேர்ந்து அங்கு பல பிரிவாகி குழந்தை உருக்கொள்ள, அதை பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகனானான்; கார்த்திகேயனானான் (இந்த சேதிகளை இராமாயணமே கூறுகிறது) என்பதாகவும் இருக்கிறது.
10. இவ்விரண்டு கதாநாயகர்களின் (இராமன் - கந்தன்) மனைவிமார்களும் தங்கள் பிறப்பை அறிய முடியாதவர்கள்.
அதாவது, இராமனின் மனைவி சீதை யாரோ பெற்று பூமியில் போடப்பட்டு, புழுதியில் மறைந்துகிடந்து ஓர் அன்னிய அரசனால் கண்டெடுத்து வந்து வளர்க்கப்பட்டவள்.
கந்தன் மனைவி வள்ளியும் யாராலோ ஒரு மானிடம் ஒரு ரிஷியால் சினை ஆகி பெறப்பட்டு, காட்டில் ஒரு குழியில் கிடக்கப்பட்டு, ஒரு வேட அரசனால் கண்டெடுத்துக் கொண்டு போய் வளர்க்கப்பட்டவள்.
11. இராமனுக்கு சீதை (விஸ்வாமித்திரன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள். கந்தனுக்கு வள்ளி (நாரதன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள்.
12. இராமனுக்கு எதிரி (இராவணன் என்னும்) தேவர்கள் விரோதி; தேவர்களை அடக்கி ஆண்டவன். கந்தனுக்கு எதிரி (சூரபத்மன் என்னும்) தேவர்கள் விரோதி, தேவர்களை அடக்கி ஆண்டவன்.
13. இராமனுக்கு ஆயுதம் வில். கந்தனுக்கு ஆயுதம் வேல்.
14. இராவணனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன். மாபெரும் வரப்பிரசாதி.
சூரபத்மனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன், மாபெரும் வரப்பிரசாதி.
15. இராமனுக்கு லட்சுமணன் என்கின்ற ஒரு சகோதரன் உதவி செய்கிறான்.
கந்தனுக்கு கணபதி வீரவாகு என்கிற சகோதரர்கள் உதவி செய்கிறார்கள்கள்.
16. இராவணனுக்கு சூர்ப்பனகை என்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
சூரபத்மனுக்கு அசமுகி என்கின்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
17. இராவணனுக்கு இந்திர சித்து என்னும் (மேகநாதன் என்ற) மகன்; இவன் மகாபலசாலி. வீரன்.
சூரபத்மனுக்கு பானுகோபன் என்கின்ற ஒரு மகன். இவன் மகா பலசாலி.
18. இராவணனுக்கு விரோதமாக இராவணன் தம்பி விபீஷணன் என்பவன் இருந்து கொண்டு, எதிரியைப் புகழ்ந்து, சீதையை விடும் படிக்கூறி, எதிரிக்குக் காட்டிக் கொடுக்க நாட்டை விட்டுப் போய்விடுகிறான்.
சூரபத்மனுக்கு விரோதமாக சூரபத்மன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரியைப் புகழ்ந்து பேசி சயந்தனை சிறை விடும்படிக் கூறி, எதிரிக்கு அனுகூலமாக நாட்டை விட்டுப் போய் விடுகிறான்.
19. இராவணன் மகன் இந்திர சித்து இராமனைப் புகழ்கிறான்.
சூரபத்மன் மகன் பானுகோபன் கந்தனைப் புகழ்கிறான்.
20. இராவணனிடம் தூதனாக அனுமான் சென்று இலங்கையை அழித்துவிட்டு வருகிறான்.
சூரபத்மனிடம் தூதுவனாக வீரவாகு சென்று வீர மகேந்திரத்தைஅழித்து விட்டு வருகிறான்.
21. இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் லட்சுமணன், அவள் தலைமயிரை இழுத்துக் கீழேபோட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
சூரபத்மன் தங்கை அசுமுகியின் கைகளை மாசானன் என்பவன், அவள் மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
22. சூர்ப்பனகை சீதையை இராவணனிடம் சேர்க்க முயற்சிக்கிறாள்.
அசுமுகி இந்திராணியை சூரபத்மனிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறாள்.
23. சூர்ப்பனகை மூக்கு, காது அறுபட்டவுடன் அண்ணன் இராவணனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
அசுமுகி கை அறுபட்டவுடன் அண்ணன் சூரபத்மனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
24. அதற்கு ஆக கோபப்பட்டு இராவணன், இராமனுடன் சண்டைக்குப் போகிறான்.
அதற்கு ஆக வேண்டியே சூரபத்மன் ஆத்திரப்பட்டு, கந்தனுடன் சண்டைக்குப் போகிறான்.
25. இராமனுக்கு சுக்கிரீவன் அனுமார், அங்கதன், நீலன், சாம்புவந்தன் முதலியவர்கள் உதவி செய்கிறார்கள்.
சூரனுக்கு நவ வீரர்கள் உதவி செய்கிறார்கள்.
இராமனை மூலபலம் எதிர்க்கிறது என்றும், சூரனுக்கு ஓர் அரக்கி வயிற்றில் வெட்ட வெட்ட அசுரர்கள் பிறக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
26. சூர்ப்பனகை உற்றார் உறவினரை ஓலமிட்டு அழைத்தாள். அசுமுகி உற்றார் உறவினரை நினைந்து ஓலமிட்டாள்.
27. சூர்ப்பனகை, வெள்ளிமாமலையை அசைத்த மன்னவா! என் மூக்கறுத்தப் பகைவனை நோக்காயா? என்று இராவணனிடம் ஓலமிட்டாள்.
அசுமுகி, கதிரவனை சிறை செய்த மன்னாவோ! யான் பட்ட குறையினை அறியாயோ? என்று சூரனிடம் அழுதாள்.
28. சூர்ப்பனகை, யான் அடைந்த அவமானத்திற்குப் பழி வாங்க வாராயா?, என்று அழுதாள்.
அசுமுகிசூரனிடம், பழி பூண்டு நின்றாயே, என்று அழுதாள்.
29. சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணன் சபை புகுந்தாள்.
அசுமுகி அழுதுகொண்டு சூரன் சபை புகுந்தாள்.
30. இராவணன் கோபம் கொண்டு வருந்தி சீதையை அடையக் கருதினான், அடைய துணிந்து விட்டான்.
சூரன் கோபம் கொண்டு மனம் கொதித்து, இந்திராணியை அடையக் கருதினான்.
31. இராவணன் சீதையைத் தூக்கி வந்து சிறை வைத்தான்.
சூரபத்மன், இந்திராணி ஒளிந்து கொண்டதால் அவள் மகன் சயந்தனையும், சுற்றத்தார்களையும் சிறை செய்தான்.
32. சீதை சிறையில் வாடி வதங்கி அழுதாள். சயந்தன் சிறையில் வாடி அழுதான்.
33. சீதை சிறையில், இராமன் வந்து விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினாள்.
சயந்தன் கடவுள் வந்து தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினான்.
34. சீதை அழுது எண்ணியதால் இராமன் விற்படை இலங்கைக்கு வந்தது.
சயந்தன் எண்ணி அழுததால் வீரமகேந்திரத்திற்கு வேற்படை வந்தது.
35. இராம தூதனாக அனுமான் இலங்கை வந்தான்.
முருக தூதனாக வீரவாகு வீரமகேந்திரம் வந்தான்.
36. இலங்கை வீரர்களாலும், சூரர்களாலும் கனல் கக்கும் கண்ணர்களாலும் நிறைந்திருந்தது. இலங்கையில் பசி இல்லை. ஏழை இல்லை. பிணி இல்லை. கவலை இல்லை.
வீரமகேந்திரத்தில் உள்ளவர் வரத்தினில் பெரியர். வன்மையில் பெரியர். உரத்தினில் பெரியர். அங்கு, வீரமகேந்திரத்தில் நலிந்து, மெலிந்து, நரை, திரை கொண்டு, பசி கொண்டவர் இல்லை.
37. இலங்கையில் வானவர் பணிந்து பணி செய்தனர். காவல் காத்தனர். பணியாளாய் நின்றனர். இதை அனுமான் பார்த்தான்.
வீரமகேந்திரத்தில் வானவன் வணங்கி ஏவல் புரிந்தனர். மீன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
38. இராவணனது பெருமையையும், அவனது தவத்தையும் அனுமான் வியந்து போற்றினான்.
சூரனின் தவத்தின் பெருமையை வீரவாகு வியந்து புகழ்ந்தான்.
39. அனுமான், சீதை சிறை இருந்த அசோகவனம் சென்று சீதையைக் கண்டு அவள் சோகத்தைத் தேற்றினான்.
வீரவாகு, சயந்தன் சிறை இருந்த இடம் சென்று அவனைத் தேற்றினான்.
40. அனுமான் இராவணன் முன் அழைத்துச் செல்லப்பட் டான்.
வீரவாகு சூரன் முன் சென்றான்.
41. இங்கே இராமன் பெருமையைச் சொல்லுகிறான்.
அங்கே முருகன் பெருமையைச் சொல்லுகிறான்.
42. அனுமான், இராவணனிடம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளே இராமனாய்த் தோன்றினான் என்கிறான்.
வீரவாகு தன்னிகரில்லா இறைவனே முருகனாகத் தோன்றினான் என்று சொல்லுகிறான்.
43. அனுமான் சொன்னது இராவணன் செவியில் ஏறவில்லை.
வீரவாகு சொன்னது சூரன் செவியில் ஏறவில்லை.
44. அனுமான், உன் செல்வம் சிதையாமல், உன் வாழ்வு குலையாமல் இருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிடு என்று இராவணனுக்குச் சொன்னான்.
வீரவாகு, நின் சேனையோடு நீ நெடிது வாழ வேண்டு மானால் வானவரைச் சிறையினின்று விடுக, ஆறுமுகன் அடிபணிக என்று சூரனுக்குச் சொன்னான்.
45. அனுமான் இலங்கையை எரித்தான்.
வீரவாகு மகேந்திர நகரை அழித்தான்.
46. அனுமான் அரக்க வீரரை அழித்த பின் இராமனிடம் சென்றான்.
வீரவாகு அசுரன் சேனையைச் சிதைத்த பின் அதைவிட்டுச் சென்றான்.
47. இராவணன் மந்திரிசபை கூட்டினான். அனுமான் செய்ததை எடுத்துரைத்து வருந்தினான்.
சூரன் மந்திரிசபை கூட்டினான். வீரவாகுவின் ஜெயத்தை மந்திரிகளுக்குச் சொல்லி வருந்தினான்.
48. இராவணன் சேனைக் காவலன் மகோதரன் எழுந்து வீரம் பேசினான்.
சூரனின் ஆட்களான கால சித்தனும், சூரனின் மகனாகிய பானுகோபனும் வீரம் பேசினார்கள்.
49. இராவணன் மகிழ்ச்சியும், தீரமும் கொள்கிறான்.
சூரன் மகிழ்ந்து ஊக்கம் கொள்கிறான்.
50. இராவணன் தம்பி விபீஷணன் எழுந்து இராவணனுக்குப் புத்தி கூறுகிறான்.
சூரன் தம்பியாகிய சிங்கமுகன் சூரனுக்குப் புத்தி கூறுகிறான்.
51. இராமன் கடவுள் என்றும், நீ வாழ வேண்டுமானால் சீதையை விட்டுவிடு, என்றும் விபீஷணன் கூறுகிறான்.
சிங்கமுகன், முருகன் ஆதிபரம் பொருளென்றும், நீ வாழ வேண்டுமாயின் வானவரை விட்டு விடு, என்றும் சொல்லுகிறான்.
52. இராவணன், எதிரியைப் புகழ்ந்த விபீஷணனைக் கடிகிறான்.
சூரன், எதிரியைப் புகழ்ந்த சிங்கமுகனை வெறுக்கிறான்.
53. இராவணன், இராமனை ஏளனம் பேசி இழிவுபடுத்திச் சொல்லுகிறான்.
சூரன், சுப்ரமணியனை ஏளனம் பேசி அலட்சியமாய்க் கருதிச் சொல்லுகிறான்.
54. இராவணன், விபீஷணன்மீது குற்றம்சாட்டித் திட்டு கிறான்.
சூரன், வீரவாகுவின் மீது குற்றம் சாட்டித் திட்டுகிறான்.
55. விபீஷணன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
சிங்கமுகன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
56. போர் நடக்கிறது. முதல் நாள் போரில் இராவணன் தோற்று மீளுகிறான்.
போர் நடக்கிறது. முதல் நாள் போரில் சூரன் மகன் பானுகோபன் தோற்று மீளுகிறான்.
57. இராமன் இராவணனை, இன்று போய் நாளை வா, என்கிறான்.
முருகன் பானுகோபனை, இன்று உன்னைப் போக விடுகிறேன் என்கிறான்.
58. இராமன் இராவணனை, இப்பொழுதாவது சீதையை விடுத்துப் பிழைத்துப் போக, என்று எச்சரிக்கிறான்.
முருகன் இரண்டாம் நாள் போரில் சூரனை, இப்பொழுதாவது வானவரை விடுத்தால், உயிர் வாழ்வாய்; இல்லையெனில் மடிவாய் என்று எச்சரிக்கிறான்.
59. இராவணன், மறுமொழி கூறாது அரண்மனை சென்றான்.
சூரன் மறுமொழி கூறாது அரண்மனை அடைந்தான்.
60. இந்திரசித்தன் போருக்குச் சென்று தோல்வி அடைந்து தந்தையிடம் வந்து, இராமனை வெல்ல முடியாது. சீதையை விட்டுவிடு; உயிர் வாழ்வோம் என்கிறான்.
பானுகோபன் போரில் தோற்று, தந்தை இடம் வந்து, வானவரை விட்டு விட; உயிர் வாழலாம் என்கிறான்.
61. இராவணன் மகன்மீது கோபம் கொண்டு, உயிரை விடுவேனே ஒழிய சீதையை விட முடியாது. மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதல்ல, என்கிறான்.
சூரன் மகன்மீது கோபித்து, உயிர் விட்டாலும் விடுவேன்; வானவரை விட்டு வசைக்காளாகி வாழமாட்டேன், என்கிறான்.
62. இராவணன் மகன் இந்திரசித்தன் கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று கருதி, இலக்குவனோடு போர் தொடுத்து மாண்டான்.
சூரன் மகன் பானுகோபன் போருக்குச் சென்று மடிகிறான்.
63. இராவணன் இராமனுடன் போரிட்டு மடிந்தான்.
சூரன் முருகனுடன் போரிட்டு மடிந்தான்.
64. அவன் மனைவி மண்டோதரி புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
இவன் மனைவி பதுமை புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
இப்படியாக இன்னும் பல பொருத்தங்கள் காணலாகுகின்றன. ஆகவே, கந்தபுராணத்தைப் பார்த்து நகல்படுத்திய கதையே இராமாயணம்.
---------------------ஈ.வெ.ரா. மணியம்மையாரால் தொகுக்கப்பட்டது - "குடிஅரசு" 8-7-1944 மற்றும் 3-5-1947
நன்றி- தமிழ் ஓவியா.
Posted by தேரியூரான் at 8:50 AM 0 comments
ஓவ்வொரு ஆணுக்கும் பாடமாய் அவர் வாழ்க்கை!!! அவர் வாயால்
பாடம் கற்போம்!! அதன்படி நடக்க முயல்வோம்!!!
Posted by தேரியூரான் at 5:20 PM 0 comments
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் வலைப்பதிவர்களையும் கைது செய்ய தமிழக அரசு முன் வருமா???
சீமான் மற்றும் அமீர் அவர்களின் உரையை தார்மீகமாக ஆதரிக்கும் என்னைப் போன்ற வலைப்பதிவர்களையும் கைது செய்ய வேண்டியது தானே!!!
என்னடா நடக்கிறது தமிழ்நாட்டிலே!!!
http://www.kumudam.com/webtv_streaming.php?type=Politics&catid=38&strid=3586%20&leftid=2
Posted by தேரியூரான் at 6:59 AM 1 comments
தொடற்ந்து புடுங்கி கொண்டிருந்தால் தமிழன் புடுங்குவான் உன் ஆட்சியை!!!
Posted by தேரியூரான் at 8:18 PM 0 comments
Posted by தேரியூரான் at 8:09 PM 0 comments
தமிழனுக்கு விரோதமாக செயல்படும் இந்து நாழிதளை தமிழகத்தில் இருந்து ஒழிக்கப் பாடுபடுவோம்!!!
எவ்வளவு கொழுப்பு இருந்தால் ராம் பின்வருமாரு பேசுவான்
//“These chauvinistic tendencies are inimical to the interests of India”//
என்.ராம் துப்பாக்கி முனையில் இருந்தால் இப்படி பேசுவானா??
தமிழர்களே ஒன்று படுவோம்!!!
தமிழனுக்கு விரோதமாக செயல்படும் இந்து நாழிதளை தமிழகத்தில் இருந்து ஒழிக்கப் பாடுபடுவோம்!!!
Posted by தேரியூரான் at 9:03 PM 1 comments
உண்மைகள் கசக்கத்தான் செய்யும்!!!
செந்தழல் ரவியின் பதிவு:
தனம் : ஓசியில் கூட போயிராதீங்கடே (A)
http://tvpravi.blogspot.com/2008/09/blog-post_21.html
//ஏற்கனவே உயிர் படத்தில் புருசனின் தம்ம்ம்பியை லவ்வி ஏதோ புரச்சி ஏற்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகை சங்கீதா "தனம்" படத்தில் ஐட்டமாக நடித்து அதை விட பெரிய புரச்சி ஏற்படுத்தியிருக்கிறார்...//
'ஐட்டமாக'-- என்று கூறும் நீர் அதற்கு உம்மனம் படைத்த ஆணே அதற்கு முழு முதற் காரணம் என்பதை மனதில் கொள்ளும்!!
படத்தின் சில உண்மைகள் கான,
படம் " தனம்!".>< புண்படுகிறதோ! அப்போ கோபப்படாத பார்ப்பனர்கள், இப்போது கோபப்படுகிறார்களே!
http://idhuthanunmai.blogspot.com/2008/09/blog-post_21.html
தனம் படத்தை காண இங்கே அழுத்தவும்
http://www.nathiyosai.com/2008/09/full-movie_16.html
Posted by தேரியூரான் at 4:27 PM 2 comments
SP.VR. SUBBIAH அவர்கள் தனது பின்வரும் பதிவில்,
http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_14.html
//இப்பொது சொல்லுங்கள் உங்கள்:
ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை
ஆண்டுகள் ஆகும்?
யோசித்து விட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்
இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.
அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும்
அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும்
பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்
இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான். இன்னும் லக்கினமும்
வேண்டுமென்றால், மறுபடியும் to be multiplied by 12
விடை ஒரு யுகம் ஆகும். ஒரு யுகத்திற்கு ஒரு உங்களுடையதைப் போன்ற
ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.
நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!
தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
///
என்று கூறியுள்ளார்.
அவர் சொல்லும்படி
குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள் எடுத்துக்கொண்டால்
இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 180 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.
இவரை போன்ற ஆட்கள் அறிவியலின் அடிப்படை தெரியாமல், கேள்வி கேட்க யாரும் இல்லை என்று எண்ணி கன்டதையும் அறிவியல் உண்மையாக சித்தரிக்க/ திரிக்க முயல்வது சமுதாயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்!!!
Posted by தேரியூரான் at 10:48 AM 3 comments
சமீப காலமாக இணையத்தில் காமம், யோனி முதலான சொற்கள் மட்டுருத்தப் பட வேண்டும் என சில கலாச்சாரக்காவலர்களால் முன்னின்று நிலைநிருத்தும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சென்னை தமிழ் பதிவர் ஒருவர் இதைப்பற்றி கூருகையில் இதை முன்னின்று நடத்துபவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள், அவர்கள் இருக்கும் இடங்களில் இதுவெல்லாம் பெரிய விடயமில்லையே? என்று.
அவர் எதிர்பார்ப்பு இயற்கையே!! ஆனால் அமெரிக்க வாழ் தமிழர்கள் மனம் அவ்வளவு மாற வில்லை என்பதுவே உண்மை!
என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் படி பெரும்பான்மையான அமெரிக்க வாழ் தமிழர்கள் இங்கே வாழ்ந்தாலும் அமெரிக்காவில் உள்ள பெண்கள் எல்லாம் பணம் கொடுத்தால் படுக்கைக்கே வருவார்கள் என்று தவறாக நினைப்பது மட்டுமின்றி அப்படி அவர்கள் எண்ணுவது போலவே நடக்கிறார்கள்.
இப்படிபட்ட எண்ணம் இங்கே 40 வருடங்களாக வாழும் தமிழர், இந்திய அறிவியல் கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளவர், கணிப்பொறி ஆய்வாளர், அமெரிக்க பச்சை அட்டை ( கிரின் கார்ட்) பெற அமெரிக்கப் பெண்ணை மணந்த தமிழர் என பல தரப்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இப்படிப் பட்ட உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் மேலோங்கி கிடப்பதை காண்கிறேன்.
இதற்கு மாற்றாக உண்மையையும், யதார்த்தத்தையும் புரிந்த சிலரில் இங்கையே பிறந்து வளர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் இங்கே படிப்பு மற்றும் வேலைக்காக வந்த ஒரு சில பெண்களைப் பார்க்கிறேன்.
பெரும்பான்மையான அமெரிக்க வாழ் தமிழர்கள், தங்கள் வட்டாரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதுவே முற்போக்காக எண்ணுகிறார்கள்.
இப்படிப்பட்ட எண்ணங்களுடைய தமிழர்கள் மனம் மாற வேண்டும் அல்லது மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்!!!
Posted by தேரியூரான் at 3:32 AM 1 comments
இட்லி வடையின் கண்ணுக்கு பச்சை வண்ணம் மட்டுமே தெரிவது ஏன்? திருப்பதியின் சிவப்பு வண்ணமும் தெரிந்தால்தான் உண்மை வண்ணம் (இட்லியின் வண்ணம் வெள்ளைங்க) தெரியும்.
இட்லி வடையின் பச்சை வண்ணப்பார்வை இங்கே!!!
தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதி
http://idlyvadai.blogspot.com/2008/06/blog-post_21.html
திருப்பதியின் சிவப்பு நிறம் இங்கே!!!
தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிய திருப்பதி. விபச்சாரம் + கோயிலின் ஜாதிவெறி அம்பலப்படுத்தப்பட்டது.
http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_7388.html
Posted by தேரியூரான் at 7:28 AM 0 comments
தினமலத்தின் அண்ட புளுகு!!! - ஒபாமாகிட்ட இருந்தது 4 கை குரங்கு, இவுங்க கூத்தடிக்கிறது 2 கை குரங்கு.
ஆனால் 2 கை- 4 கை என்பது தண்ணிக்குள் விட்ட குசி கதையாய்விட்டது!!!
டைம்ச் இதழில் வந்த படம் கீழே! பெரிதாக்கி பார்க்கவும்!!!
உண்மை அறிய சுட்டி கீழே!!
http://vinodksharma.blogspot.com/2008/06/obama-and-jindalhanuman-and-monkey.html
மற்ற பார்ப்பன பத்திரிக்கைகளும் இதே நிலையை கடைப்பிடித்துள்ளது ++++
Posted by தேரியூரான் at 5:42 PM 0 comments
Posted by தேரியூரான் at 8:55 PM 0 comments
http://video.google.com/videoplay?docid=661781458816902089&q=indian+widow&ei=DlNDSKfpGor2rQLi4tmXCQ
மகன் தான் தன்னை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்ற நம்மவரின் எண்ணங்களை மாற்றி மேற்கத்தியர்களைப் போல் அவர்களின் காலில் அவர்களை நிற்க பழக்கப் படுத்தினால் நிலமை மாறும்.
Posted by தேரியூரான் at 6:53 PM 0 comments
போலியான பக்தி இங்கே!!!
அறிவியல் பூர்வமான உண்மை இங்கே!!!!
Posted by தேரியூரான் at 4:47 PM 1 comments
பாருங்கள்!!! என்ன ஒரு நயம்!!!
Posted by தேரியூரான் at 8:43 PM 1 comments
எப்படி !! பாருங்கள், உணரத் தொடங்குவோம்!!!
Posted by தேரியூரான் at 11:53 AM 0 comments
எது உண்மை!!! பாருங்கள், யோசியுங்கள்!!!!
Posted by தேரியூரான் at 11:47 AM 0 comments
ஆங்கிலத்தில்
Posted by தேரியூரான் at 11:35 AM 0 comments
ஆங்கிலத்தில்
Digg - German restaurant replaces waiters with serving tracks
செருமனியில்
உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது !!! நம்மவர்களோ சூத்திரர்களாக, பஞ்சமர்களாக இரட்டைக் குவளையுடன் !!!!
Posted by தேரியூரான் at 4:17 PM 0 comments
ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;
மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;
சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்
அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!
வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!
பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!
கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!
நன்றி- "விடுதலை"- 15-4-2008, தமிழ் ஓவியா
Posted by தேரியூரான் at 3:52 PM 0 comments
20 ஆம் நூற்றாண்டு/மேற்கத்தியம்/யோனி : 21ஆம் நூற்றாண்டு/கிழக்கத்தியம்/தமிழச்சி?
Posted by தேரியூரான் at 7:46 PM 3 comments